நம் பங்கைப் பற்றி

பரிசுத்த பரலோக மாதா ஆலயம், பிரகாசபுரம்

1880 முதல் பிரகாசபுரத்தின் இறை மக்களுக்கு ஆன்மிக பணி செய்து வரும், தூத்துக்குடி மறைமாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க ரோமன் கத்தோலிக்க பங்கு.

பங்கு கண்ணோட்டம்

பரிசுத்த பரலோக மாதா ஆலய பங்கு, பிரகாசபுரம், தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரோமன் கத்தோலிக்க பங்காகும்; இது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1880ல் முறையாக நிறுவப்படுவதற்கு முன்பே, இக்கிராம மக்கள் எளிமையான கூரைக்கோவில் ஒன்றில் வழிபாடு நடத்தி வந்தனர்; அதுவே காலப்போக்கில் இன்றைய பங்காக வளர்ந்தது. இன்று இப்பங்கில் பிரதான ஆலயமும் சுற்றியுள்ள கிராமங்களில் ஏழு கிளை பங்குகளும் உள்ளன.

நம் பணி

வார்த்தையாலும் செயலாலும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளோம். திருவருட்சாதனங்களை பக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடவும், ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்டோருக்கும் சேவை செய்யவும், இளையோரை விசுவாசத்திலும் ஆன்மிகத்திலும் வளர்க்க அழைக்கப்பட்டுள்ளோம்.

நம் நோக்கம்

மரியன்னை பக்தியில் ஆழமாக வேரூன்றி, நற்செய்திப் பணி, தொண்டுப் பணிகளில் அர்ப்பணிப்புடன் இயங்கும் பங்காக நாம் திகழ்கிறோம் — பங்கு குடும்பங்கள் இறை பக்தியில் வலுப்பெறவும், இளையோர்கள் முனைப்புடன் செயல்படவும், அனைத்து மக்களும் ஆன்மிகத்திலும் பரிசுத்தத்திலும் வளர்ச்சிப் பெறவும் நாம் முயல்கிறோம். பிரகாசபுரம் பங்கினை நற்செய்தியின் ஒளியால் நிரப்பிடவும், ஒரே சமூகமாக திகழ்ந்திடவும் பணி செய்கிறோம்.

ஆலய கட்டிடக்கலை

1967ல் அர்ச்சிக்கப்பட்ட தற்போதைய ஆலயத்தின் மத்தியில் பரலோக அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அழகிய பிரதான பலிபீடமும், பீடத்தின் பின்புற மேற்பகுதியில் பாடுகள் பட்ட இயேசுவின் சிலுவை மரமும், இரு பக்கமும் பரலோக மாதாவும் சூசையப்படும் பொலிவுடன் வீற்றிருக்கும் அழகிய பீடமும், உட்புறத்தில் இயேசுவின் சீடர்களை சித்தரிக்கும் அழகிய வண்ணக் கண்ணாடி ஓவியங்களும் கொண்ட அழகிய ஆலயமாக காணப்படுகின்றது.

தூத்துக்குடி மறைமாவட்டம்நிறுவப்பட்டது 18807 கிளை பங்குகள்4 பள்ளிகள்6 அமைப்புகள்மரியன் பங்குதமிழ்நாடு

நம் ஆதிரட்சகி

பரலோக மாதா

நம் பங்கு பரலோக மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புனித கன்னி மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் ஆழ்ந்த விசுவாசத்துடனும் மகிழ்ச்சியுடனும் சமூக ஒற்றுமையுடனும் திருவிழா கொண்டாடப்படுகிறது.

திருவிழா நாள்: ஆகஸ்ட் 15

பங்கு அடையாளம்

நிறுவப்பட்டது1880
தற்போதைய ஆலயம்1967ல் அர்ச்சிக்கப்பட்டது
மறைமாவட்டம்தூத்துக்குடி மறைமாவட்டம்
மாவட்டம்தூத்துக்குடி, தமிழ்நாடு
கிளை பங்குகள்7 கிளை பங்குகள்
மொழிதமிழ் / ஆங்கிலம்
ஆதிரட்சகிபரலோக அன்னை மாதா