பங்கு வரலாறு
ஆரம்பகால மிஷனரி சேசு சபை குருக்கள் முதல் இன்றைய துடிப்பான பங்குத்தந்தையர்கள் வரை — 140 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது
Pre-1800s
Early Period
நாசரேத் பகுதியில் ஆரம்பகால கத்தோலிக்க குடியேற்றம்
கி.பி. 18ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நம் பிரகாசபுரம் ஊரானது 'சாண்பத்து' என்று அழைக்கப்பட்ட நாசரேத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. அக்காலக்கட்டத்தில் இப்பகுதியில் 4000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
★ First Catholic communities in the Nazareth–Pragasapuram region
1800
18th Century
கூரைக்கோவில் எழுப்பப்பட்டது
வடக்கில் காமநாயக்கன்பட்டியிலும், தெற்கில் வடக்கன்குளத்திலும் இரு பெரு ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவ்விரு ஊர்களுக்கு நடுவில் நடுநாயகமாக விளங்கும் வகையில் நம் ஊராம் பிரகாசபுரத்திற்கு புதியதொரு ஆலயம் அப்போதைய நம் முன்னோர்களால் 18ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டுள்ளது.
★ Thatched-roof chapel established between two great churches
1831
19th Century
ஊரின் பெயர் 'பிரகாசபுரம்' என மாற்றப்பட்டது
'புதூர்' என்ற பெயரை மாற்றி 'பிரகாசபுரம்' என்ற புதிய பெயரை வைத்துள்ளனர். 1831 ஆம் ஆண்டில்தான் அவ்வாறு மாற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை அவ்வாறே அழைக்கப்பட்டு வருகின்றது.
★ Village renamed from Puthur to Pragasapuram
1880
Church Founded
பரிசுத்த பரலோக மாதா ஆலயம் நிறுவப்பட்டது
மிகப்பழமையான காலத்திலேயே மாதாவுக்காக ஆலயம் அமைத்த நம் ஊரைச் சேர்ந்த 14 கத்தோலிக்கக் குடும்பங்கள் 1880 ஆம் ஆண்டு மாதாவுக்காக அமைக்கப்பட்டிருந்த கோவில் கூரையை அகற்றிவிட்டு ஓடு போட்ட மண் கோவில் உருவாக்கினார்கள். அக்கோவில் அதே ஆண்டு மாதாவின் விண்ணேற்ற நாளான ஆகஸ்டு 15 ஆம் நாளில் அர்ச்சிக்கப்பட்டது.
★ Church consecrated on 15 August 1880
1887
Growth Period
பிரகாசபுரம் தனிப்பங்காக உருவானது
1887ல் திருச்சி மறை மாவட்ட ஆயர் நம் ஊராம் பிரகாசபுரத்தை தனிப்பங்காக செயல்பட உத்தரவிட்டார்கள். பிரகாசபுரம் பங்கு 15 இணையூர்களுடன் சாத்தான்குளம் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு அருட்திரு. நிக்கோலஸ் அடிகளார் கண்காணிப்பில் விடப்பட்டது. அப்போது இப்பங்கில் 2882 கிறிஸ்தவர்கள் இருத்ததாக மதுரை மிஷன் குறிப்பேடு கூறுகிறது
★ Separated from Sathankulam with 15 villages; 2,882 Christians
1895
Feast Milestone
முதன் முதலாக திருவிழா சப்பரங்களோடு திருவிழா
1895 வரை வெறும் வழிபாடுகள் மூலம் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நம் திருவிழா அதன்பின்பு சப்பரத்திருவிழாவாக மாறி விட்டது.
★ Feast becomes a sapparam (chariot) celebration
1909
Independent Parish
பிரகாசபுரம் தனிப்பங்காக மீண்டும் செயல்பட தொடங்கியது
1909ல் ஜனவரி மாத இறுதியில் இருந்துதான் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை. E. மாஸ் என்ற சேசு சபைகுரு நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
★ First parish priest: Fr. E. Mas, SJ (1909–1911)
1913
Church Construction
அடிக்கல் நாட்டப்பட்டது – 'அசனம்' ஆரம்பமானது
1913ல் அருட்தந்தை. T. மிக்கேல் அடிகளார் பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில்தான் முதன்முதலாக நம் ஆலயத்தில் 'அசனம்' என்று அன்னதானம் ஆரம்பமானது. அதே ஆண்டில்தான் அருட்தந்தை. T. மிக்கேல் அடிகளாரால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
★ Asanam begun; foundation of the new church laid
12 June 1923
Diocese Formation
தூத்துக்குடி மறைமாவட்டம் உதயமானது
1923 ஜூன் 12ல் தூத்துக்குடி தலைமையில் தனி மறைமாவட்டம் உதயமானது. தூத்துக்குடி மறைமாவட்டமே இந்தியாவின் முதல் லத்தீன் ரீதியிலான மறைமாவட்டம் ஆகும்.
★ Diocese of Tuticorin established — India's first Latin Rite diocese
1929
Education
பள்ளி தொடங்கப்பட்டது
நம் பகுதி மாணவச்செல்வங்களின் அறிவுப்பசியைப் போக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் 1929ஆம் ஆண்டு நம் ஊரில் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. 1939-ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
★ School founded 1929; raised to middle school in 1939
1931–1940
Spiritual Growth
திவ்ய நற்கருணை பவனி ஆரம்பமானது
1931–1940 முடிய உள்ள காலக்கட்டத்தில்தான் நம் பங்கில் திவ்ய நற்கருணைப் பவனி ஆரம்பமாகியுள்ளது.
★ Blessed Sacrament procession begun
1949
Church Construction
ஆலயப்பணிகள் மீண்டும் தொடங்கின
1949 வரை அஸ்திவாரத்தோடு தடைபட்டு நின்றிருந்த நமது புதிய ஆலய காட்டுமான பணியானது மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது.
★ Church construction resumed in 1949
1954
Church Construction
வெளிப்புற சுவர்கள் எழுப்பப்பட்டன
அன்றைய காலக்கட்டத்தில் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை. லூர்து மரியநாதர் அடிகளாரின் சீரிய முயற்சியால் ஆலயத்தின் வெளிப்புற மற்றும் உட்புறச் சுவர்கள் 1954ல் எழுப்பப்பட்டன.
★ Exterior and interior walls completed in 1954
21 November 1967
Church Dedicated
புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது
புதிய ஆலயமானது நம் முன்னோர்களின் கடின உழைப்பாலும் அருட்தந்தை. G. பிரான்சிஸ் அடிகளாரின் சீரிய முயற்சியினாலும் ஆலய கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு அப்போதைய தூத்துக்குடி மேற்றாராணியார் தாமஸ் பெர்னாண்டோ அவர்களின் திருக்கரங்களினால் அர்ச்சிக்கப்பட்டு நமது ஊர் இறை மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
★ Church consecrated 21 November 1967 by Bishop Thomas Fernando
1967
Bell Tower
மணிக்கூண்டு கட்டப்பட்டது
கோவிலுக்கு அருகில் மணிக்கூண்டு சுடுகற்களாலேயே கட்டி முடிக்கப்பட்டது.
★ Bell tower built of fired brick
1972–1978
Flag Mast
கேரளாவில் இருந்து புதிய கொடிமரம் கொண்டு வரப்பட்டது
அப்போதைய பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை. குரூஸ் மரியான் அடிகளாரின் பெரும் முயற்சியினால் கேரளாவில் இருந்து நம் ஆலயத்திற்கு புதிய கொடிமரம் கொண்டு வரப்பட்டது.
★ New flag mast brought from Kerala
11 August 1983
Century Chapel
நூற்றாண்டு கெபி கட்டப்பட்டது
நம் பங்கின் நூற்றாண்டை (1880–1980) பின்வரும் சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டுமென அப்போதைய பங்குத்தந்தை பங்ராஸ் M. ராஜா அடிகளார் விரும்பினார். அதனால் நம் மக்களின் பேராதரவுடன் நமது பழைய ஆலய முன்மண்டபத்தில் நூற்றாண்டு கெபி கட்டப்பட்டது. அக்கெபி இன்றும் 'நூற்றாண்டு கெபி' என்றே அழைக்கப்படுகிறது.
★ Centenary Chapel built in the old church front hall, 1983
17 June 1995
School
புதிய பள்ளி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டுக் கொண்டிருந்த நம் மரியன்னை நடுநிலைப்பள்ளிக்கு அப்போதைய பங்குத்தந்தை எட்வர்ட் ஜே. அடிகளாரின் முயற்சியால் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
★ New school building opened 17 June 1995
14 August 1999
St. Michael Chapel
புனித மிக்கேல் அதிதூதர் கெபி திறந்து வைக்கப்பட்டது
1999ல் நம் ஊரில் நிகழ்ந்த தொடர் துர் மரணங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் இருந்த வேளையில் நம்மைப்பாதுகாக்க பாதுகாவலர் ஒருவர் நமக்கு தேவை என்ற எண்ணம் உதயமானது. அதன் விளைவாக உதித்ததுதான் புனித மிக்கேல் அதிதூதர் கெபி.
★ St. Michael Chapel opened 14 August 1999
2003
St. Mary's Mahal
St. மேரீஸ் மஹால் – அடிக்கல் நாட்டப்பட்டது
அப்போதைய பங்குத்தந்தை அருட்திரு. ஜாக்சன் M. அருள் அவர்களின் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
★ St. Mary's Mahal foundation laid in 2003
14 August 2004
Velankanni Chapel
வேளாண்கண்ணி மாதா கெபி திறந்து வைக்கப்பட்டது
அப்போதைய பங்குத்தந்தை அருட்திரு. ஜாக்சன் M. அருள் அவர்களின் காலத்தில்தான் வேளாங்கண்ணி மாதா கெபியும் எழுப்பப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
★ Velankanni Chapel opened 14 August 2004
6 August 2006
Flag Mast
இரும்பு கொடிமரம் – முதல் திருவிழா கொண்டாட்டம்
2005ஆம் ஆண்டு கொடிமரத்தை ஏற்றி நிலைநிறுத்தும்போது சரிந்து கீழே விழுந்து முரிந்துவிட்டது. எனவே இரும்பினாலான நிலையான கொடிமரம் அருட்தந்தை. ஜாக்சன் M. அருள் அவர்களின் முயற்சியினால் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
★ Iron flag mast installed in 2006 after the wooden mast broke
14 August 2007
New Chapel
மாதாவின் நூற்றாண்டு கெபி புதுப்பிக்கப்பட்டது
நூற்றாண்டு கெபி கட்டப்பட்டதன் 25ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் அப்போதைய பங்குத்தந்தை அருட்திரு. A. சூசை ராஜா அடிகளாரால் புதிய கெபி மந்திரிக்கப்பட்டு மக்கள் வழிபட திறந்து வைக்கப்பட்டது.
★ Centenary Chapel renewed and opened 14 August 2007
21 November 2016
New Chapel
புனித அந்தோணியார் கெபி திறந்து வைக்கப்பட்டது
04.11.2012 அன்று மறைந்த மண்ணின் மைந்தர் அருட்திரு. ம. பீற்றர் அடிகளாரால் அர்ச்சித்து அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் 21.11.2016ல் அப்போதைய பங்குத்தந்தையாக இருந்த அருட்திரு. S. அருள் பிரபாகர் அடிகளாரால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.
★ Foundation 2012; chapel opened 21 November 2016
2017
50th Anniversary
புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 50 ஆண்டு நிறைவு
புதிய ஆலயம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டும் நமது ஊரின் தேர் வடிவமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாகவும் பரலோகத்தாயின் அற்புதத்தேரின் உயரம் உயர்த்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
★ Church golden jubilee; miraculous car raised and renewed
17 June 2018
New Residences
பங்குத்தந்தை இல்லம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது
பங்குத்தந்தை இல்லம் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்ததினால் புதிய பங்குத்தந்தை இல்லம் அப்போதைய பங்குத்தந்தை அருட்திரு. A.அந்தோணி இருதய தோமாஸ் அடிகளாரின் முயற்சியினால் கட்டப்பட்டு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகையால் மந்திரிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
★ New parish house blessed and opened 17 June 2018
2 October 2022
Current
ஜெபமாலை தோட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது
தற்போது அருட்திரு. தா. சலேட் ஜெரால்டு அவர்களால் ஜெபமாலை தோட்டம் 02.10.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட இறைவனிடம் மன்றாடுவோம்.
★ Rosary Garden foundation laid 2 October 2022; work ongoing