ஆண்டு திருவிழா

பரிசுத்த பரலோக அன்னை திருவிழா

ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 15 வரை

––

நாட்கள்

––

மணி நேரம்

––

நிமிடங்கள்

––

நொடிகள்

திருவிழா

நாம் ஏன் கொண்டாடுகிறோம்

பரிசுத்த பரலோக அன்னையின் திருவிழாவை நம் பிரகாசபுரத்தின் முக்கியமான திருவிழாவாக கொண்டாடுகிறோம். ஆகஸ்ட் 6 முதல் 15 வரை பத்து நாட்கள் நம் ஊர் முழுவதும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.

திருவிழா திட்டம்

கொண்டாட்டத்தின் காலம்

பத்து நாட்கள் ஜெபம், ஊர்வலம், கலாச்சாரம், சமூகம் — மாதாவுக்கு மரியாதை செலுத்தி.

🚩

கொடியேற்றம் (Flag Hoisting)

ஆகஸ்ட் 6

பாரம்பரிய முறையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

📿

புனித நவநாள் ஜெபம்

ஆகஸ்ட் 7–14

9 நாட்கள் தொடர்ந்து நவநாள் ஜெபங்கள். ஒவ்வொரு நாளும் திருப்பலி, ஜெபமாலை, நவநாள் ஜெபம் ஆகியவை நடைபெறுகின்றன.

✝️

பரிசுத்த பரலோக அன்னை விழா திருப்பலியும் சப்பர ஊர்வலமும்

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15 ஆம் நாளில் சப்பரங்களோடு புனித மிக்கேல் அதிதூதர், புனித அந்தோணியார், பரலோக அன்னை மாதா திருப்பலி சப்பரங்கள் நடைபெற்று அடுத்தடுத்து பவனி வருவது கண்களுக்கு காட்சியாக இருக்கிறது.

மற்ற கெபி திருவிழாக்கள்

பரலோக மாதா அற்புத கெபி திருவிழா

ஆகஸ்ட் 16

புனித மிக்கேல் அதிதூதர் கெபி திருவிழா

செப்டம்பர் 20–29

ஆரோக்கிய மாதா கெபி திருவிழா

செப்டம்பர் 8

அந்தோணியார் கெபி திருவிழா

ஜூன் 13

சூசையப்பர் கெபி திருவிழா

மார்ச் 19

கலாச்சார முக்கியத்துவம்

வாழும் பாரம்பரியம்

நம் ஊர் மட்டுமல்ல அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் மிகப்பெரிய விழாவாக நம் ஆலயத்திருவிழா திகழ்கின்றது.

1895 ஆம் ஆண்டு முதல் மாதாவின் சொரூபத்தோடு தெருக்களில் ஊர்வலம். 1978 ஆம் ஆண்டு முதல் தேர் திருவிழா.